பூங்காவின் புல் தரையில் நடந்தால் புல் உடைந்து அழுமே என்று கவிதைப் பேசியவளே! என் இதயத்தை சுக்குநூறாக்கிவிட்டு - இன்று திரும்பிப்பார்த்து சிரித்துக்கொண்டு போகிறாயே!...
தொலைவிலிருக்கும் போது நிலவாக தொட்டுத்தழுவும்போது தென்றலாக கோபப்படுகையில் சுடர் சூரியனாக கொஞ்சும்போது குளிர் நீராக ஆசை வைப்பதில் மலையாக அன்பு காட்டுவதில் ஓர் அருவியாக
இப்படி எனக்கான உலகம் முழுவதும் நீயாகவே இருக்கிறாய் என் குட்டி...
இவ்வுலம் இறைவன் தந்தது. இனிமையின் உதயம் நட்பு தருவது. இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை, இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை. நட்போடு வாழும் வரை மகிழ்வுக்கு பஞ்சமில்லை! நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை...