காதல் தோல்வியா அழு....
வாய் விட்டு அழு....
கதறிக் கதறி அழு....
உன் கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும் வரை அழு....
பின்பு உலகத்தை பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்
காதல் தோல்வியையும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்
அழகுகளை ரசிக்க கற்றுக்கொள்
பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்
வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்துகொள்...
பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்
காதல் இறந்ததற்காக உயிரை சிந்தத் துணிகிறாய்
காதல் புனிதமானதுதான்.....
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கின்றோம்.
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கின்றோம்.
காதல் தோல்வியா?
காதலியை வெறுத்திருந்தால்
தேடிச் சென்ற காதலை மறந்து
தேடி வரும் காதலை அணைத்துக்கொள்
காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல் காதலையும் கற்று
மறந்ததாய் நினைத்துக்கொள்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்பதை புரிந்துகொள்.....
¸.•♥•PAKEE Creation¸.•♥•
Subscribe to:
Post Comments (Atom)
ரசித்த வரிகள்
ReplyDelete//தேடிச் சென்ற காதலை மறந்து
தேடி வரும் காதலை அணைத்துக்கொள்//