Monday, December 12, 2011

நினைவுகளாய் என்னுள்...



வானத்தில் இருக்கும் மேகம் போல்
எத்தனை உறவுகள்
என் வாழ்வில் வந்து போனாலும்
நான் கல்லறைக்கு செல்லும் வரை
நினைவுகளாய் என்னுள்...

இறைவா உனக்கேன் என் மீது இத்தனை கோபம்...



என் இதயத்து ஆசைகள்
நிறைவேறுவது என்று
இறைவன் பிறக்கும்
போதே எழுதிவிட்டான்
சிலவேளை உன்னை
வெறுத்திருந்தால்
உன்னுடன் வாழ்ந்திருப்பேனோ
இறைவா உனக்கேன் என் மீது இத்தனை கோபம்...

என் கண்ணீருடன் ஒப்பிடுகையில்...



ஆற்றின்
வேகம் கூட குறைவுதான்
என் கண்ணீருடன் ஒப்பிடுகையில்...

இறைவனின் படைப்பில் எனக்கு பிடித்தது...



இறைவனின் படைப்பில்
எனக்கு பிடித்தது
கனவு ஏனென்றால்
அதில் மட்டும் தான்
நீ எனக்கு என்று காண்பதால்...

சருகாகி உன் காலடியிலே கிடப்பேன்...



நீ மரம்
நான் இலை
என்னை நீ உதிர்த்தாலும்
சருகாகி உன் காலடியிலே கிடப்பேன்...

வரமா சாபமா தெரியவில்லை...



வரமா சாபமா தெரியவில்லை
நினைவுகளில் மட்டும் மல்ல
கனவிலும் வதைகின்றாய் என்னை தேடி வந்து...

உன்னை நினைத்து வருத்தி வருந்துகின்றேன்...



கடலில் கண்ணீர் விட்ட போது தான்
என்னை புரிந்துகொள்ள வில்லை
கரையில் கருவாடாய் காய்ந்து கொண்டு இருக்கும்
போது கூடவா தெரியவில்லை
நான் உன்னை நினைத்து
வருத்தி வருந்துகின்றேன் என்று...

என் காதல் உனக்கு புரியும்...



மழை பொழியும் போது தான்
வானவில் தெரியும்
என் கண்ணில் மழை பொழியும் போது தான்
என் காதல் உனக்கு புரியும்...

இதயம் சுவாசிக்க மறுக்குதடி...



என் சுவாசத்தில் தானே
உன்னை கலக்க நினைத்தேன் ஆனால்நீயோ
நான் உள்வாங்கும் மூச்சைபோல் அல்லாது
வெளியே செல்லும்மூச்சை போல் அல்லவா
இருந்து வெளியே சென்று விட்டாய்
நீ இன்றிஎன் இதயம் சுவாசிக்க மறுக்குதடி...

இதயம் கிடையாது...



பூவிற்க்கும்
பெண்ணிற்க்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
இரண்டுக்கும் இதழ்கள் உண்டு
ஆனால் இதயம் கிடையாது...
PAKEE Creation