Sunday, November 14, 2010

அழியாத காதல்...


நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு..
நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்..
உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ..
துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ..
என் உயிரை நீ அழிக்கலாம்,உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...

நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு...

நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு
என் கண்களின் கண்ணீர்...
நீ என்னை பிரிந்ததின் பிரதிபலிப்பு
என் அண்ணன் எழுப்பிய கல்லறையில்
எனது ஆழ்ந்த நித்திறை...

காதல் ரோஜா...


காதல் எனும் மலரைப் பறிக்க
ரோஜா தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த நான்
கையிலொரு அழகிய மலரைப் பறித்துக்கொண்டு
வெளியே வந்தேன்...
கையில் வைத்திருந்த ரோஜாவைப் பார்த்து ரசித்தவர்களின்
கண்களுக்கு புலப்பட வாய்ப்பில்லை
என் கையில் தென்படும் கீறல்களும் காயங்களும்...

உயிரையே துறந்தேன் நான்...

இமைக்க மறந்தேன் நான்-என்
கண்களுக்குள் நீ தஞ்ஞம் புகுந்ததால்
இதயத் துடிப்பை நிறுத்தினேன் நான்-என்
இதயத்திற்குள் உறங்கும் உன்
தூக்கம் கெட்டு விடும் என்பதால்
உயிரையே துறந்தேன் நான்-நீ
என்னை மறந்து இன்னொரு ஆணை மணம் புரிந்ததால்..

உயிராக அவளை நினைத்தேன்...


உயிராக அவளை நினைத்தேன்
அப்போது எனக்கு தெரியவில்லை
உயிர் எப்போது வேண்டுமனாலும்
பிரியும் என்று.....

காதல்...


உறவுகளை நிலைக்க வைத்திடும் காதல்...
வேதனையை தாங்கிடும் காதல்...
வெற்றியைத் தந்திடும் காதல்...
சரித்திரம் படைத்திடும் காதல்...
இது பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள காதல்..

மறக்க தெரியாது...


மழைக்கு அழத்தெரியும் ஆனால்
சிரிக்கத்தெரியாது
சூரியனுக்கு எரிக்கத்தெரியும் ஆனால்
அணைக்கத் தெரியாது
எனக்கு நினைக்கத்தெரியும் ஆனால்
மறக்க தெரியாது...

நட்பு...


உள்ளம் ரெண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகும்...
அதே உள்ளத்தில் நட்பு துளிர்விட்டால்
கண்ணீர் என்ற வார்த்தை
வாழ்க்கை அகராதியிலிருந்தே அழிந்து போகும்...

உண்ணை எனக்குப் பிடிக்கும்...


கண்ணீர் எனக்குப் பிடிக்கும்
அது என் கவலை தீர்க்கும் வரை
உறவுகள் எனக்குப் பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை
உண்ணை எனக்குப் பிடிக்கும்
என் உயிர் பிரியும்வரை...

நட்பே நீ என் உயிராக மட்டும் இரு...


நட்பே நீ என் உயிராக மட்டும் இரு...
இதயமாக இருக்க வேண்டாம்
ஏன் என்றால் உன்னை துடிக்க விட்டு
நான் உயிர் வாழ விரும்பவில்லை...
நட்பு என்றால் என்னவென்று யோசித்தேன்...
நல்ல வேளை உன்னை சந்தித்தேன்.......
இல்லை என்றால் தெரியாமலே போயிருக்கும்...

PAKEE Creation