Wednesday, January 23, 2013
காதல் விரக்தி...
நான் ஒரு முட்டாள்
ஏமாற்றப்பட்ட பின்பும் அவளுக்காக ஏங்கித்தவிக்கிறேன்
வெந்த பின்பும் உயிர் வாழத்துடிக்கும் மீன் போல
தோற்றுப்போன பின்பும் தெருத் தெருவாய் அலைகிறேன்
அவள் முகம் பார்க்க
காய்ந்து போன சருகு போல
தேய்ந்துபோன வேளையிலும்
போகத்துடிக்கும் உயிர கூட
அவளோடு ஒரு முறை பேசிவிட்டுசெல்லாதோ
என ஏங்கித் தவிக்கிறேன்
அன்றெல்லாம் வெந்து போன இதயத்தில்
இன்றெல்லாம் வித்தியாசமான
அவளின் நினைவுகளால்
சுடு மணலில் மாட்டிக்கொண்ட
மண்புழுவாய் துடித்துக்கொண்டிருக்கின்றேன்
எவ்வளவுதான் என்னை அவள் வெறுத்தாலும்
அவளின் இதயம் எனும் பூஜை அறையின்
எங்கோ ஒரு மூலையில் எனது நினைவுகளும்
உறக்கம் கொள்ளும் எனும் நப்பாசையில்
வழ்த்துகொண்டிருக்கிறேன் அவளுக்காக...
அம்மா...
கோவில் கருவறையிலே சிற்பம்
என்னை தான் கருவறையிலேயே
சுமந்ததேன்றல் அது நீ தானம்மா
நானே என்னை பாரமாக நினைத்த போதும்
நீ என்னை பாசமாகவே பெற்றுடுத்தாய்
பாரத்திற்கு நான் அடையலாம் என்றால்
பாசத்திற்கு நீயே அகராதி
அறியாத வயதில் உன்னை அழைத்தேன் அம்மாவென்று
அப்போது என் மீது காட்டினா புரியாத அன்பு
அன்பின் உரியது உயர் நிலையென்றால்
அன்பே உருவானது உன் நிலையம்மா...
Sunday, January 20, 2013
Tuesday, January 8, 2013
Subscribe to:
Posts (Atom)







