skip to main |
skip to sidebar
என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல் இல்லை
உன்னை மறக்க முடியாமல்...
கடவுளை வழிபட ஆசை தான்
ஆனால்
வழிபடும் அந்த ஒரு
நொடியில் உன்னை மறந்து
கடவுளை நினைத்து விடுவேனோ
என்ற பயம் எனக்கு...
ஒரு முறை
நீ
என் கனவில் வரவேண்டும்
என்பதற்காய்
ஒரு ஆயிரம்
தூக்க மாத்திரைகளையும்
நான் சாப்பிட தயார்...
நிலாவின் அழகை சொல்லுவதை விட
அதை பார்த்தல் தான் தெரியும்
அதே மாதிரி காதல் பற்றி
சொல்லுவதை விட
காதலித்து பார் புரியும்...
நான் அதிகாலையில்
எழுந்து கண் விழிப்பது
என்கவிதைகளில் தான்
ஏன்
என்றால் அவைகள் அனைத்திலும்
உன் புகைப்படங்கள்...
எல்லோரும் சொன்னார்கள்
உன் வாழ்க்கை உன் கையில் என்று
அவர்களுக்கு எங்கே
தெரிய போகிறது
என் வாழ்க்கை
உன் வார்த்தையில் உள்ளதென்று...
நான் சிரித்தாலும் சரி
எனக்கு வலித்தாலும் சரி
கண்ணீர் என் அம்மாவின்
கண்களில் மட்டும் தான்...
என்
கண்களுக்கு
இமைகளும் சுமைதான்
உன்னை
பார்க்காத நாட்களில்...
கடவுள் கூட
எதையாவது
சாதிக்க வேண்டும்
என்று நினைத்து தான்
உன்னை
படைத்து இருக்கிறான்...
ஊர் அடங்கும் நேரம்
ஓசை உறையும் நேரம்
மௌனம் பேசும் நேரம்
தென்றல் வீசும் நேரம்
காதல் கடலில் மூழ்கும் கப்பலாக நான்
பூட்டிய அறைக்குள் புகுந்தாலும்
போர்வைக்குள் ஒளிந்தாலும்
ஓசை இன்றி துரத்துகிறது உன் நினைவு
ஆயிரம் மலைகளையும் தாண்டி
ஆயிரம் கடலையும் கடந்து
இன்பம் துன்பம் நினைக்காமல்
வருகிறேன் உனக்காக
நீ கடலாக நான் தீவாக
நீ இரவாக நான் நிலவாக
நீ வானமாக நான் மேகமாக
நீ பூவாக நான் தேனீயாக
என்றுமே உனக்குள் நானாக
என்னை சுற்றிலும் நீயாக
எங்குமே நீயாக
என் வாழ்க்கையே உனக்காக
வருவாயா என் துயர் நீக்க...?