காதலி நீ என்னோடிருந்தால் நிலவைப் பெயர்த்து உன் முகத்திற்கு மஞ்சள் பூசுவேன் மின்னும் தாரகை எடுத்து உந்தன் சேலைக்கு வண்ணந்தீட்டுவேன் வான நீலத்தை உறிஞ்சி உந்தன் விழிக்குள் விட்டு அழகு பார்ப்பேன் வளைந்த மேகத்தை பிடித்துப் உந்தன் தேகத்தில் ஒட்டிவைப்பேன் சுட்டெரிக்கும் சூரியனை தொட்டெடுத்து உந்தன் கூந்தலுக்குள் செருகி படம் பிடிப்பேன் விலகிச் செல்லும் நிழலைப் பிடித்து உனக்கு குடை பிடிப்பேன்...
அம்மாவின் முலையைச் சப்பிச்சப்பி உறிஞ்சிய பால் ஜீரணித்து இரத்தமாகி இளைஞனாகி மார்புநிமிர்ந்த பெண்மையில் மயங்கி மார்புதைந்து பாலும் பழமும் பவளவாயும் என்று ருசித்து ருசித்து அன்னை முலை தந்த அப்பாலில் தொடங்கி இறுதி நேரத்தில் புகட்டப்படும் இப்பால் வரையில் எத்தனை பால்..? ஆண்பால் பெண்பாலாய் பாலியல் படித்து திருப்தியாயிற்றா மனது..? இல்லையே...
எந்தக் காலத்தில் வாழ்கிறோம்? நெருப்பைத் தின்று உஷ்ணங்களை ஏப்பமாய்விடும் காலம் ஒன்றிலா? எச்சரிக்கை நினைவுகளும் இருட்டடிப்புக்களும் எங்கள் மூளையை உரசும் ஒரு இறுகியா காலத்தின் ஓரத்திலா..?
உள்ளே போனால் தானே மது வெறிக்கும் உண்டால்தானே மது மயக்கும் ஆனால்- நினைக்கவே வெறிக்கிறதே இது என்ன மயக்கம்? "இதன் பெயர்தான் இன்ப மயக்கம் நினைத்ததும் இனிக்கும் காம மயக்கம், உண்ணும் கள்ளும் ஈடாகாத இன்ப மயக்கம்" "உள்ளினும் தீராய் பெருமகிழ செய்தலால் கள்ளினும் காமம் இனிது"...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com