சக்தியிழந்த நிலையில்தான் மனிதன் கடவுளை நினைக்கிறான் சுயபலத்தில் நம்பிக்கையிருக்கும்வரையில் மனித எண்ணத்தில் மமதை ஒங்கி நிற்கிறது நிர்ப்பலமாகித் திண்டாடும் சமயத்தில் தான் அகங்காரம் விலகி கடவுளுக்கு இடம் கொடுக்கிறது மனது வேண்டியவேளையில் மட்டும் கடவுளை நினைத்தால் போதுமா என்ற சர்ச்சையில்கூட மனித மனம் அந்தச் சமயத்தில் இயங்குவதில்லை ஆபத்தான நிலைமையில் ஆதரவாகப் பிடித்து கொள்ளக்கூடிய இடத்தை மனம் நாடுகிறது திக்கற்ற நிலைமையில் மனித மனத்துக்கு பிடிப்பை அளிப்பது கடவுளின் நினைப்பு ஒன்றுதான்...
எது சரித்திரம்? மக்கள் அறிந்ததே சரித்திரம் அவர்கள் ரத்தத்தோடு ரத்தமாக கலந்து விட்ட நிணைகளே சரித்திரம் "நாம் நீர்க்குமிழிகள் அல்ல வடியாத பெருவெள்ளத்தின் துளிகள் நாம்" அற்ப வாழ்வுடைய தனிமனிதர் அல்ல அழிவற்றதோர் பரம்பரையின் உறுப்பினர் நாம் நேற்று இருந்தோம் , இன்று இருக்கிறோம் நாளைக்கும் இருப்போம் என்று தோள்தட்டத் தூண்டுவதே சரித்திரம்...
வாழ்க்கையின் ஒரு பகுதி தானே கனவு ஆனால் அந்தக் கனவில் தானே மனிதன் மனத்தின் சுகங்களை அடைய முடியாத இன்பங்களை அடைகிறான் கைக்கெட்டாதது மனத்துக்கு எட்டுகிறது கனவில்...
உண்மையில் ஆண்கள் கோழைகள் தான் உலகில் பிரதி தினம் அக்கம் பக்கத்தில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள் பிறப்பதை அறிந்தும் தங்கள் மனைவிக்கு அந்த நிலை வந்தால் என்ன பயம் பயப்பிடுகிறார்கள்...
ஒரு பெண் தனக்குச் சொந்தம் என்று ஏற்பட்டதும் ஆண்கள் கேட்டுக் கொள்ளும் கேள்வி "என்ன இருந்தாலும் என் மனைவி என்னை விட்டால் இவளுக்கு யாரிருக்கிறார்கள் ?"
அதுவரை வளர்த்த தாய் தந்தையர் , சகோதர சகோதரிகள் இருந்தாலும் அவர்களையெல்லாம் அசட்டை செய்கிறது ஆண் மனம் தனக்குத்தான் பொறுப்பிருப்பதாகத் துள்ளுகிறது மணமான மறுகணம் இந்த விசித்திரம் ஏற்படுகிறது காரணம் சம்பிரதாயமா? அல்லது இயற்கை விளைவிக்கும் விந்தையா? பதிலில்லாத புதிர் , அவிழ்க்க முடியாத விந்தை ஆனால் இது ஏற்படுகிறது ஆண் பெண் உறவில்...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com