Sunday, January 20, 2013

என் அவள் மீட்டும் போது...



பளுதப் போனா
வயலின் கூட
அழகாக சிரித்து
சுகமான ராகம்
தருகின்றதே
என் அவள் விரலால் அதை
மீட்டும் போது...

Tuesday, January 8, 2013

இதயமெனும் கோவிலில் குடியிருக்கும் தெய்வம் நீ...





என்னுள் பூத்த முதல் கவிதை நீ
எனக்குள் உறைந்த உயிர் நீ
என் சுவாசத்தில் கலந்த காற்று நீ
என் இதயமெனும் கோவிலில்
குடியிருக்கும் தெய்வம் நீ...

என்னை சிதைத்து விட்டாய் பெண்ணே...



என் இதயத்தை பாறையாக தான் வைத்திருந்தேன்
நீயோ உளியாக வந்தாய்
சிலையாக வடிப்பாய் என்று நினைத்தேன்
ஆனால் நீயோ
என்னை சிதைத்து விட்டாய் பெண்ணே...

இரட்டை குழந்தைகள்...



நீயும் நானும்
இரட்டை குழந்தைகள்
நாம் இதய கருவறையில்...

மறக்க முடியாமல்...



என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல் இல்லை
உன்னை மறக்க முடியாமல்...

பயம்...



கடவுளை வழிபட ஆசை தான்
ஆனால்
வழிபடும் அந்த ஒரு
நொடியில் உன்னை மறந்து
கடவுளை நினைத்து விடுவேனோ
என்ற பயம் எனக்கு...

என் கனவில்...



ஒரு முறை
நீ
என் கனவில் வரவேண்டும்
என்பதற்காய்
ஒரு ஆயிரம்
தூக்க மாத்திரைகளையும்
நான் சாப்பிட தயார்...

காதல்...



நிலாவின் அழகை சொல்லுவதை விட
அதை பார்த்தல் தான் தெரியும்
அதே மாதிரி காதல் பற்றி
சொல்லுவதை விட
காதலித்து பார் புரியும்...

கண் விழிப்பது உன் புகைப்படங்கள்...



நான் அதிகாலையில்
எழுந்து கண் விழிப்பது
என்கவிதைகளில் தான்
ஏன்
என்றால் அவைகள் அனைத்திலும்
உன் புகைப்படங்கள்...

என் வாழ்க்கை...



எல்லோரும் சொன்னார்கள்
உன் வாழ்க்கை உன் கையில் என்று
அவர்களுக்கு எங்கே
தெரிய போகிறது
என் வாழ்க்கை
உன் வார்த்தையில் உள்ளதென்று...
PAKEE Creation