skip to main |
skip to sidebar
ஊர் அடங்கும் நேரம்
ஓசை உறையும் நேரம்
மௌனம் பேசும் நேரம்
தென்றல் வீசும் நேரம்
காதல் கடலில் மூழ்கும் கப்பலாக நான்
பூட்டிய அறைக்குள் புகுந்தாலும்
போர்வைக்குள் ஒளிந்தாலும்
ஓசை இன்றி துரத்துகிறது உன் நினைவு
ஆயிரம் மலைகளையும் தாண்டி
ஆயிரம் கடலையும் கடந்து
இன்பம் துன்பம் நினைக்காமல்
வருகிறேன் உனக்காக
நீ கடலாக நான் தீவாக
நீ இரவாக நான் நிலவாக
நீ வானமாக நான் மேகமாக
நீ பூவாக நான் தேனீயாக
என்றுமே உனக்குள் நானாக
என்னை சுற்றிலும் நீயாக
எங்குமே நீயாக
என் வாழ்க்கையே உனக்காக
வருவாயா என் துயர் நீக்க...?
மரங்கள் மறைந்து நின்றால்
மரநிழல் தெரிவதில்லை
மனைவியாய் அவள் வருவதனால்
மரணம் கூட எனக்கு பெரிதில்லை...
அரலிவிதையும்
இப்போது அழுகிறது
எனென்றால்
"தன்னால்" இறப்பவர்களை காட்டிலும்
"பெண்ணால்"
இறப்பவர்களே அதிகம் என்று...
கருவறையில் இருக்கும் குழந்தைகூட
கண்ணீர்விடும் எனது காதலின்
தோல்வியின் வேதனை உணர்ந்தால்.
ஆனால் நானோ என் கண்களில் வரும்
கண்ணீரைக்கூட துடைப்பதில்லை
ஏனெனில் நான் கண்களை துடைக்கும் போது
அதற்க்குள் இருக்கும் உனக்கு வலிக்குமே என்று...
உலகத்தில இரண்டே விஷயம் தான்
தோன்றும் போதும் மறையும் போதும்
அழகா இருக்கும் ஒன்னு சூரியன்
இன்னொன்னு காதல்...
எங்கிருந்தோ வந்தால்
என் வாழ்கையில் தோன்றினால்
அவள் யார் என்று நான் அறியேன்
என் மனமறியும் என்றது
அவள் புன்னகைத்தால்
பூக்கள் புன்னகைப்பதை கண்டேன்
அவளிடம் பேச முயன்றேன்
வார்த்தைகள் வற்றி மௌனம் பேசினேன்
மற்ற பெண்ணில் இல்லாத ஒன்று
இவள் பெண்மையில் கண்டேன்
அது என்னவோ நானறிய முயன்றேன்
என் மனதை தொலைத்து நின்றேன்
மன போதைஎன்றால்
ஒரு நொடியில் மறந்திருப்பேன்
இதுதான் காதல் என்றால்
அந்த காதலின் வாருகைக்காக காத்திருப்பேன்...
என்னை மறந்தே வேளையிலே
மெல்லிய பூங்காற்று என்மேல் விசியது
பறவைகளின் தாழட்டிலே
தனிமையோ என்னை சுத்துது
கண் இமைகள் மெய்மறக்கையிலே
மங்கை ஒருவளின் நிழல் முன்னே நின்றது
அழகியே அவளது விழியிலே
நாணம் ஒன்றே தெரிந்தது
அடக்கமான அவள் சிரிப்பிலே
என் மனம் ஏனோ சொக்கி போனது
மங்கையவள் வார்தையிலே
மௌனம் ஒன்றே என்னை ஆள்த்தது
அவள் யாரென்று என் மதி அறியலையே
அழகிய புன்னகை ஒளி ஒன்றே இன்று என் வசமானது...
என் இரவுகள் அவள் குரல் கேட்டே விடிந்தது
என் விடியல்கள் அவள் முகம் பார்க்க துடித்தது
என் விரல்கள் அவள் தலை கோத விழைந்தது
என் சுவாசம் அவள் வாசத்தால் நிறைந்தது
என் குறும்புத்தனங்கள் முழுதும் அவளின்
செல்ல கோபத்திற்கவே உருவானது
நான் வாங்கும் பொருட்கள்
எல்லாம் அவளாலே அழகானது
ஏனோ நான் காதல் சொன்ன போது அவளின்
மொழி மட்டும் மௌனமானது..!
நீ என்னை வெறுக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் உன்னை காதலிப்பேன்
நீ என்னை பிரிந்து விடுகிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் அந்த தவிப்பை அனுபவிப்பேன்
நீ என்னை எப்போது நினைக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் உன்னை நினைப்பேன் உன் வருகைக்காக
நீ எப்போது தனியாக தவிக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நான் நிச்சயமாக உன்னை அடைந்து விடுவேன்...
உன்னை சுற்றி ஆயிரம் உறவுகள் உள்ளன
ஆனால் என்னை சுற்றி எவருமே இல்லையே
நீ என்னுடன் இருக்க விரும்புவ என்று எண்ணினேன்,
ஆனால் நீ உன்னை சுற்றி உள்ள
உறவுகளை மட்டுமே விரும்புகிறாய்
நீ விரும்புவதற்கூட தகுதி இல்லாதவனா நான் ஆகிவிட்டன?
வலிக்கிறது இதயம்..!