Monday, August 2, 2010

இறந்தால் சொர்க்கம் எப்படி...


இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ...

என் இதயத்தில் இருப்பதாலடி...


இறக்காத காதல் ஒன்னு
என் இதயத்தில் வாழுதடி..
இறக்கவென நான் சென்றேனடி...
இதயமது இறக்க மறுத்ததடி...
இறக்காத உன் நினைவுகளும்
உன் மேல் கொண்ட காதலும்
என் இதயத்தில் இருப்பதாலடி...

மரண நேரத்தில்...


மரண நேரத்தில்

உன் மடியின்

ஓரத்தில் இடமும்

கிடைத்தால்

இறந்தும்

வாழுவேன்

உன் பாதத்தில்...

நான் மட்டும்தான் உயிரைக் கொடுப்பேன்...


உனக்குத் தெரியுமா?
உன்னுடைய வார்த்தைகளுக்கு
மற்றவர்கள்...
செவி கொடுப்பார்கள்
நான் மட்டும்தான்
உயிரைக் கொடுப்பேன்...

நம்மை பிரிந்து நம்காதலும் தவிக்கிறது...


உனக்கு பிடித்த நானும்,
எனக்கு பிடித்த நீயும்,
நமக்கு பிடித்த நம் காதலும்,
யாரிற்கும் பிடிக்காததால்,
உன்னை பிரிந்து நானும்,
என்னை பிரிந்து நீயும்,
நம்மை பிரிந்து நம்காதலும் தவிக்கிறது..

உன்னை மறக்க நினைக்கிறேன்....


உன்னை மறக்க நினைக்கிறேன்,
நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன்,
உன் முகம் என் கண்முன்னே வருகிறது
இரண்டையும் மறக்க நினைக்கிறேன்,
மரணம் கண்முன்னே வருகிறது..

இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா...


பிரிந்து விட்டதால்
முடிந்து விட்டது
என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது
"என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "
இனி உன்னால் நிம்மதியாக
வாழ முடியுமா என்று"...

வலித்துக் கொண்டேயிருக்கிறாய்...


விழியில் விழுந்தாய்!
என் இதயம் நுழைந்தாய்!
உயிரிலும் கலந்தாய்!
எனை ஏன்! பிரிந்தாய்?

உன் மேல்
நான் கொண்ட பிரியாத
அன்பை புரியாமலே
பிரிந்து சென்றாய்

நம் நினைவுகளை
தண்ணீரில்
எழுதி சென்றாய்
எனை கண்ணீரில்
மிதக்க வைத்தாய்!

என் உயிரில்
வாழ்ந்துவிட்டு
என் உலகையே இருட்டாக்கி
சென்று விட்டாய்!

ஒரே வினாடியில்
என் உயிரின்
அனைத்து துடிப்பையும்
செயலிழக்க செய்தாய்!

உன் பிரிவை மறக்க
முயல்கிறேன்
முடியவில்லை!

உன் பிரிவை மறக்க
நினைக்கும்தோறும்

இதயத்தில் இறங்கிய
முள்ளாய் என்னுள்
வலித்துக் கொண்டேயிருக்கிறாய்...

திரும்ப தர முடியுமா உன்னால்...


வான் நிலா
வானின் கண்ணீர்
புல்வெளி
பூங்காவனம்
இப்படி அனைத்தயும் ரசித்த
என் மென்மையான மனதை !

கடிகாரத்தையும்
கையில் இருக்கும் செல் போனையும்
மாறி மாறி பார்த்திருந்த
அந்த கணத்தை !

ஈமெயிலில் refresh button தட்டியும்
chat messenger லில் உன் பெயர் பார்த்தும்
காத்திருந்த அந்த நிமிடங்களை !

துக்கமின்றி துள்ளி குதித்தோடிய
என் குழந்தை உள்ளத்தை !

பெற்றோர் என் மேல்
இழந்த நம்பிக்கையை !

உன் உறவுக்காக
நான் தொலைத்த சொந்தங்களை !

உன்னை நினைத்து
உனக்காக வாழ்ந்த
ஒவ்வொரு வினாடியை !

உயர்ந்த இலட்சியங்களுடனும்
பலவித கனவுகளுடனும்
வாழ்ந்து வந்த
தன்னம்பிக்கையை !

இழந்துவிட்ட என் இறந்தகாலத்தை
மறந்துவிட்ட என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்ட என் சுயத்தை

திரும்ப தர முடியுமா உன்னால்?...

காதல் தோல்விக்கு பின்...


காதல் தோல்விக்கு பின்
தனிமையில் நடந்தேன்-
தொடர்ந்து வந்தது நிழல் என்று நினைத்தேன்
இல்லை அவளின் நினைவுகள்!

PAKEE Creation