Tuesday, September 15, 2009

நண்பனாகப்பட்டவன்...


விரட்டும் நினைவுகளுடன்
குரல்வளைக்குள் ஏதோ சிக்கி தவித்தவாறு
உன் தோள் சாய்ந்து
சட்டை நனைத்து விம்முகிறேன்
யாதென கேளாமல்
ஏதும் விசாரியாமல்
தோள் தட்டி அரவணைத்தபடி
“சரி..சரி..சரியாகிடும்…”
கணத்தில் கனங்கள் கரைந்ததும்
மீண்டும் அழுகிறேன்
நீ கிடைத்ததற்க.

நட்புடன்...


கண்களில் தொடங்கி
காலங்களில் நிறைகின்றதடா நட்பு....
அறிமுகம் கிடைத்தவுடன் ஆயுசுக்கும் முடிவதில்லை....
உன் நட்பு ஒரு பொது சொத்து..அதில்
என் பங்கை பட்டாயிட்டு விட்டாய்...... இனி
என் முயற்சிகளில் முதலாமவன் நீ....
வெற்றிகளில் கைதட்டும் கரம் நீ....
வேதனைகளில் தோள் கொடுக்கும் தோழன் நீ...
லட்சியத்தின் லட்ச தீபம் நீ....
வானம் போலவே உன் நட்பின்
தேவை முடிவதில்லை................

Monday, September 14, 2009

காதல் என்றசொல் காதில் விழுந்தால்...


காதல்
என்றசொல்
காதில்
விழுந்தால்,
உன் முகம்
கண்முன்
வந்து
போவதை
தவிர்க்க
முடியவில்லை...!

சொல்லிவிட்டு செல்...


நீ
பிரிந்து
சென்றது
கூட
எனக்கு
வருத்தமில்லை...
என்னை
நேசித்த உன் இதயத்தை,
எங்கே
கழற்றி வைத்தாய்
என்று மட்டும்
சொல்லிவிட்டு செல்....!

உனக்காய் நான் அழுதுகொள்கின்றேன்...


உன்
விழி
விதைக்கும்
கண்ணீர்
முத்து தரைசேரமுன்னம்
என் கரம்
அதை ஏந்தும்...
அழுதிடத்தோன்றினால்
என்னை
நினை
உனக்காய்
நான்
அழுதுகொள்கின்றேன்....!

நம் காதலின் சின்னமாக…..


அன்பே…
எனக்காக
அழ நினைத்தால்,
என் கல்லறையில்
அமர்ந்து அழு….
உன்னால் நான் தான்
வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு
கண்ணீரால்
என்
கல்லறையில்
முளைத்திட்ட
சிறு செடியாவது வாழட்டுமே…
நம் காதலின்
சின்னமாக…..!

அன்புத் தோழனாய்...



உன் மனம்
சோர்ந்து போகும்
போதெல்லாம்
சோகம் தீர்த்து,
தோள் கொடுக்கும்
அன்புத்
தோழனாய்
என்றுமே
உன்னுடன் நானிருப்பேன்...

நானிருப்பேன் கலங்காதே....!


ஆயிரம்
உறவுகள்
தோன்றியும்,
அன்பில்லையே
என சலிக்காதே
நட்பைவிட
வேறேது இன்பம்
நானிருப்பேன்
கலங்காதே....!

என்னை எப்பொழுது புரிந்துக்கொள்வாய்....?


டேய்,
சின்ன சின்ன
சண்டைகாக
நீ
என்னை
ஆயிரம் முறை
காயப்படுத்துகிறாய்…
எப்பொழுது
நீ
என்னை
புரிந்துக்கொள்வாய்....??

உன் நினைவுகளை...


உன்னை
மறக்கிறேன்
என்று கூறி
உன் நினைவுகளை
அழகாகவே
பத்திரப்படுத்திக்கொள்கிறேன்...
வெறுக்கிறேன் என்று கூறி
உன்னை
அதிகமாகவே நேசிக்கிறேன்....!
PAKEE Creation