Saturday, August 15, 2009

மறந்ததோ...


ஓடிந்ததோ
சிறகு....?
முறிந்ததோ
மனது...?
விழுந்ததோ
உயிர்...?
மறந்ததோ
காதல்...?

என்றும் நினைவுடன்...


இரவில் என் கண்கள்
தூங்கினாலும்,
என் நினைவுகள் இன்னும்
தூங்கவில்லை...
உன்னை மட்டும் நினைக்கும்
இந்த இதயத்திற்கு உன்
நினைவுகள் துணையாகி
விட்டது..!

உன்னுள் இருப்பது
நான் என்று உனக்குத்
தெரியுமா?
கடலில் விழுந்த நட்சத்திரத்தை
தேடுவது போல தேடுகிறேன்
என் காதலை உன்னிடத்திலே..!

காத்திருந்து பழகியவள் நான்
உன்னக்காக காத்திருப்பேன்..
என்னை புரிந்துக் கொள்ள
இந்த உலகில் எவரும்
பிறக்கவில்லை..
என்னை எனக்கே
பிடிக்கவில்லை..காரணம்
இன்னும் தெரியவில்லை..

உன் நினைவுகள் நெஞ்சினில்
புதைந்ததினால் என் ஆயுள்
முடியும் வரை
தொடரும் நினைவுகள்..!

Sunday, July 26, 2009

உன் நினைவுகளால்...


நான் எங்கு
சென்றாலும்
நீயே என்னுடன்
வருகிறாய்
உன்
நினைவுகளால்.

இரத்த கண்ணீர்...


என் விழிகள்
இரத்த கண்ணீர்
வடிக்கின்றன
கண்ணீர் இன்றி
என் கண்மணியை
நினைத்து.

கண்ணீர் மழை...


என் விழிகள்
நித்தமும்
கண்ணீர் மழை
நித்தமும்
உன்னை என்
இதயம்
நினைப்பதால்.

நான் உயிருடன் இருக்கும் வரை...


இனியவளே
என்னுள் இருக்கும்
உன் நினைவினை
அழித்துவிடலமென்று
நினைக்காதே
அந்த சூரியன் கூட
என்னை எரிக்கலாம்
ஆனால்
என்னுள் இருக்கும்
உன் நினைவினை
அழிக்க முடியாது
நான் உயிருடன்
இருக்கும் வரை.

கண்மணியே...


கண்மணியே
கனவுகளாக
போகலாம் என்
வாழ்வு ஆனால்
கனவாகி போகது
என் காதல்.

என் உடலில் உயிரில்லை...


என் உடலில் உயிர் இருந்த
வேளை
உன் மனதில் நானில்லை
உன் மனதில் நான் வந்த
வேளை
என் உடலில் உயிரில்லை.

நான் சாகும் வரை...



நான் சாகும் வரை
உன்னை என்
இதயத்தில்
சுமப்பேன்.

உயிராக நேசிக்கும் அவளை...


உண்னையான காதல்
தோல்வியில் முடிந்தால்
உருகிடும் இதயம்
இறக்கும் வரை உயிராக
நேசிக்கும் அவளை.
PAKEE Creation