Saturday, March 1, 2014

தாய்மை...



பெண்ணிடம் தாய்மை தத்துவத்தைப் படைத்து விட்ட ஆண்டவன்
முதன் முதலில் அவர்கள் அந்தப் பேற்றை அடையும் போது
கருவிலே வளரும் குழந்தையை எண்ணி
அந்த தாய் இன்ப நினைவும்
அந்த குழந்தை நல்ல படியாக பிறந்து 

நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமே என்ற கவலையும் 
அதனால் ஏற்படும் இடர்களுமாகப் பலவித உணர்ச்சிகளை 
அடைய வைத்து விடுகிறான்...

தாயின் வயிறேனும் சுவர்க்க கமலத்தினின்று 
ஆசாபாசங்கள் நிறைத்த மண்ணிலே விழுந்தவுடன் 
எழுப்பும் ஒலி கேட்டவுடன் தாய் எல்லா நினைவுகளையுமே 
விட்டு விடுகிறாள்...

சூழ்நிலை...

காலம் சூழ்நிலையை படைக்கிறது
சூழ்நிலை இரும்பு மனதைக்கூட
மாற்றிவிடுகிறது...

சிலபேரின் உள்ளம்...

சிலபேரின் உள்ளம்
நடுக்கடல் போன்றது
அலை வீசாது
ஆனால்
அதன் அழத்தைக் கூறமுடியாது...

காதல்...

இன்று காதல் சுபாவமாகவும்
கண்ணீர் அதற்கு விலையாகவும் ஆகிவிட்டன
ஆனால் அந்தச் சுபாவத்திற்குத் தப்பியவர்கள்
சிலரும் உலகத்தில் இருக்கிறார்கள்

இயற்கையாகவே எந்தப் பெண்ணின்
நளினத்திற்கும் வசப்படாத மிகச் சிலரும் உண்டு...

ஆண் பெண்...

எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவள் விலகி விலகிச்
செல்லத்தான் ஆணுக்கு ஆசை அதிகமாகும்
வலிய வலிய வந்து ஒருத்தி மேலே விழுந்தால்
அவள் பேரழகியனாலும் வெறுப்பு தான் வரும்...

Thursday, January 2, 2014

பெண்...

ஒருவர் நான்கு நாட்கள்
நம்பிக்கைக்குரியவராகக் காட்சியளித்து விட்டால்
தன் சகல உடைமைகளையும்
அவரிடம் ஒப்படைத்து விடுகிறாள் பெண்...

பெண்...

இக்கட்டான நேரங்களில்
பெண்ணுக்கு வரும் துணிச்சல்
சிங்கதுக்குக் கூட வராது...

சீதை...

இராமன் காட்டுக்குச் செல்லும்போது
சீதை ஏன் கூடச் சென்றால்?
கணவன் மீது இருந்த காதலால்
மட்டுமல்ல அங்கும் ஒருத்தி
வந்து விடக்கூடாதே என்றுதான்...

இரவு...

ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே
ரகசியத்தை வைத்த இறைவன்
அந்த ரகசியத்தைப் பரிமாறிக்கொள்ளவே
இரவைப் படைத்து இருக்கிறான்
இல்லை என்றால் இரவு என்ற
ஒன்றே இல்லாமல் வாழ முடியாத என்ன?...

தனிமை...

துன்பப்பட்டவன் தனிமையை
நாடினால் சமயங்களில்
தற்கொலை எண்ணமே வரும்...
PAKEE Creation