Thursday, January 2, 2014

மெழுகுவர்த்தி...

மனிதன் பலபேரின் உதவி இருந்தாலும்
தான் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிறான்

எவரின் உதவியும் இல்லாததால்
தன்னைத்தானே அழித்து
திரியை சின்னதாக்கி தீயோடு
சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி...

வாழ்க்கை போராட்டம்...

வாழ்க்கை போராட்டம் மனிதர்களுக்கு மட்டுமில்லை
எல்லா உயிர் இனங்களுக்கும் தான்
மனிதன் மட்டும் தான் சோதனையிலும் வேதனையிலும்
புழுவாய் துடிக்கிறான்...

உன் சுதத்திர வாழ்க்கை உன் கையில்...



நம் நாட்டில் உள்ள பெரிய பிரச்சனை பெரிய வியாதியே இது தான்
ஒவ்வொருவரையும் அவர் படிக்கும் போதே
அவர் இந்த வேலைக்கு என்று முடிவு பண்ணிவிடுகிறோம்
அல்லது அவர் படிப்பை வைத்து அவர் இந்த வேலைதான்பார்க்க வேண்டும்
என தீர்மானித்து விடுகிறோம்
சொல்லப்போனால் இது எழுதப்படாத சட்டம் போல்ஆகி
எல்லோரது வாழ்க்கையிலும் புகுந்து விளையாடுகிறது

ஆக கடைசியில் மனிதனாய் பிறப்பதேபடிப்பதற்கு
பின் படித்த படிப்பிற்கு வேலை தேடுவதற்கு
பின் கல்யாணம் குடும்பம் என சொட்டிலாகி விடுவது
என ஒரு குறுகிய வட்டத்திற்குள்அடைப்பட்டு விடுகிறது

அதைத் தாண்டி யாரும் சிந்திப்பதும் இல்லை
நம் வீட்டாரும் சரி நம்மை சுற்றியுள்ளவர்களும் சரி
நம்மை இப்படி சிந்திக்க விடுவதுமில்லை

நாம் விருப்பப்பட்ட வாழ்க்கையை நாம் ஏன்அமைத்து கொள்ளகூடாது?
என்பது பற்றியெல்லாம் யாரும் சிந்திக்க முடியாத அளவுக்கு
ஒவ்வொருவரும் ஒருவித காட்டாயத்தில்அகப்பட்டு விடுகிறோம்
அப்பிடியே வாழ்ந்து நம் வாழ்க்கையை முடித்து கொள்கிறோம்
பிறப்பு இறப்பு இந்த இரண்டுக்குள்ளும் நாம் காண்கிற கனவு
சிலது பலித்து விடுகிறது சிலது கனவாகியே விடுகிறது
நாம் எப்பிடி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறோமோ
அது முடியமால் அந்த தவிப்பையும் மனதில் வைத்துகொண்டு
இறந்து போகிறோம்

நீ என்ன வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறயோ
அது வாழ முடிந்தவரை முயற்சி செய்
உன் வீட்டார் சுற்றத்தார் எதிர்ப்பை மீறி
நீ நினைத்த ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்...

Wednesday, December 25, 2013

என் எதிர்காலத்தை...

நான் மற்றவர்கள் போல் என் எதிர்காலத்தை பற்றி
கவலைப்படுவது இல்லை
ஆனால்
நான் கடந்து வந்த பாதையை மட்டும்
எப்போதும் நினைச்சு பார்த்துகிட்டு இருப்பேன்...

சில பேரின் மனம்...

சில பேரின் மனம்
கஸ்ரப்படுகிற மாதிரி நடந்து கொள்வதுக்கும்
காரணம் உண்டு

கொல்லன் பட்டறையில் இரும்பை
பழுக்க காய்ச்சி அடிக்கிறானே
ஏன்?
இரும்பின் மீது அவனுக்கு கோவமா இல்லை
அப்பிடி செய்தல் தான்
பயனுள்ள கத்தியாகவோ சுத்தியாகவோ மாறும்
என்பதுக்காக...

எல்லோருமே...

வாய் விட்டு சிரிக்கும் எல்லோருமே
இதயம் திறந்து சிரிக்கிறார்கள் என்று
நம்பிவிடக்கூடாது
அப்பிடி நம்புகிற குணம் நம்மிடம்
இருப்பதால் தான்
நாம்மோடு இருந்து கொண்டே
நமக்கு குழி பறிக்கிறார்கள்...

புகழ்ச்சி...

பொன்னுக்கும் போதைக்கும் பெண்ணுக்கும்
இல்லாத ஆளை மயக்கும் சக்தி
புகழ்ச்சிக்கு உண்டு...

என்ன வாழ்க்கைடா...

அன்பு என்னும் சொல்
வெறும் அலங்கார சொல் ஆகி விட்டது
காட்சிக்கு அளிக்கப்படும் மரியாதை
கடமைக்கு அளிக்கப்படுவதில்லை
பொய்யான விளம்பரத்திற்கு கிடைக்கும் புகழ்
மெய்யான உழைப்பிற்கு இல்லை
வெறும் பேச்சுக்கு அளிக்கப்படும் பட்டமும் பதவியும்
உண்மையான தொண்டுக்கும் சேவைக்கும் கிடைப்பதில்லை...

வாதிப்பவன் & சாதிப்பவன்...

ஒரு விஷயத்தைப்பற்றி வாதிப்பவன் 
ஏற்றுக்கொள்வான்
ஆனால்
சாதிப்பவன் ஏற்றுக் கொள்ளவேமாட்டன்...

ஒன்றுமில்லை...

ஒன்றுமில்லை என்ற சொல் 
ஒரு ஆணிடம் இருந்து வந்தால் 
அதற்கு அர்த்தமும் ஒன்றுமில்லை தான்
ஆனால் 
அதே ஒன்றுமில்லை என்ற வார்த்தை
ஒரு பெண்ணின் வாயில் இருந்து வந்து விட்டால்
அதற்குள் எண்ணிலடங்காத விஷயங்கள்
அடங்கி இருக்கிறது...
PAKEE Creation