Friday, May 10, 2013

மரண வலி...

அன்பை மறுதலிக்கும் போது
பல நூறு மரண வலி வந்து செல்லும்...

நீ...



நீ 
என் மனதிலிருந்த 
செடியைப் பறித்துப் போயிருக்கலாம்
ஆனால் 
வேரின் வாசனை 
முளைத்துக்கொண்டுதான் இருக்கும்...

வாழ்க்கை...



ஏதோ ஒரு சில தவறுகள்
நம் பல சரிகளை அடிமையாக்கி
ஆண்டு விட்டு செல்வதற்க்கு மறுபெயர் தான்
வாழ்க்கை...

நேசிப்போம்...



இல்லை எனக் கூற ஏதுமே இல்லை
என் பகுதிக்கவிதைகளை
யாரோ தொடர்கிறார்கள்
என் மறைவிற்குபிறகு
யாரோ வரப் போகிறார்கள்

ஒன்றை இழந்ததும்
ஒன்று கிடைக்கிறது
ஜனனம் மரணம்
சுழற்சி நிற்காது
இருக்கும் வரைக்கும்

இருப்போரை நேசிப்போம்
நேசதேசத்தில்
என்றைக்கும் இல்லை
நிபந்தனைகள்...

Monday, March 11, 2013

என்ன வாழ்க்கைடா...




வாழ்க்கை புரியாத புதிர்
விடை தெரியா பயணம்
முன்னுக்கு பின்
முரணான வாழ்கை
பேரும்,புகழும் கிடைக்குமென்றால்
எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கிறார்கள்,
பணம் கிடைக்குமென்றால்
அந்த பேரையும், புகழையும்
விட்டுக்கொடுக்கிறார்கள்
என்ன வாழ்க்கைடா...

Saturday, March 9, 2013

இனிப்பு...



இனிப்பு தேடி
இனி வேறெங்கும்
போவதில்லையாம்
உன் மேனி தொட்டு
இறங்கிய எறும்பு...

தெரியவில்லை...



நிலம் பார்த்து நீ நடந்தாய்
உன் கால் தடம் பார்த்து
நான் நடந்தேன்
ஆனாலும்
சேருமிடம் தெரியவில்லை
இது தான் காதல் பயணமோ...

எழுந்து வா...



கருவி இல்லாமல்
குருவி மரத்தைக்
கொத்திக் குதறுகிறது
மண்வெட்டி இல்லாமல்
மண்ணை குடைகிறது
சித்தெறும்பு
இளைஞனே
இதற்குப் பின்னும்
ஏன் தயக்கம் உனக்குள்?
சாதிக்க எல்லாமே
இருக்கிறது உன்னிடம்
எழுந்து வா...

காதல்...


மானின் துரத்தலில்
மண்டியிட்டது சிங்கம்
அம்மாடி
இதுதான் காதலா...?

என் தெய்வம்...



அன்னையே அன்று என் இதயம்
உன் வரவில் சிரித்தது
இன்று உன் சிறுபிரிவால்
அழுகின்றது
ஆயிரம் கண்ணீர்
துளிகளை கண்கள்
பிரசவித்த போது கூட
வலிக்கவில்லை இந்த உயிருக்கு
உன் பிரிவை எதிர்நோக்கும் போது
இதயம் பிளக்கின்றதே என் தெய்வமே
உன் கருவறையில்
என்னை கல்லறையாக்கிவிடு
அன்றிலிருந்து நிம்மதி
எனும் தென்றலை சுவாசிக்கின்றேன்...
PAKEE Creation