Saturday, October 20, 2012

நான் நிச்சயமாக உன்னை அடைந்து விடுவேன்...




நீ என்னை வெறுக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் உன்னை காதலிப்பேன்
நீ என்னை பிரிந்து விடுகிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் அந்த தவிப்பை அனுபவிப்பேன்
நீ என்னை எப்போது நினைக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் உன்னை நினைப்பேன் உன் வருகைக்காக
நீ எப்போது தனியாக தவிக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நான் நிச்சயமாக உன்னை அடைந்து விடுவேன்...

Thursday, October 11, 2012

என்னை ஒரு நொடிகூட நினைக்கமாட்டாய?...



உன்னை சுற்றி ஆயிரம் உறவுகள் உள்ளன
ஆனால் என்னை சுற்றி எவருமே இல்லையே
நீ என்னுடன் இருக்க விரும்புவ என்று எண்ணினேன்,
ஆனால் நீ உன்னை சுற்றி உள்ள
உறவுகளை மட்டுமே விரும்புகிறாய்
நீ விரும்புவதற்கூட தகுதி இல்லாதவனா நான் ஆகிவிட்டன?
வலிக்கிறது இதயம்..!

அன்பே...



வண்ணத்து பூச்சிகள்
உன்னை நெருங்கினால்
விரட்டி அடிக்காதே
பாவம் அது
வேறு எங்குதான் செல்லும்
வண்ணங்களை திரட்ட...

Saturday, September 29, 2012

என்னில் உன்னை பார்த்தேன்...



அலைகளின் ஓசையில் உன் குரல் கேட்டேன்
விண்மீன்களில் உன் முகம் பார்த்தேன்
மழையில் நனைகையில் உன் தழுவல் உணர்ந்தேன்
வெள்ளை நிறத்தில் உன் மனம் பார்தேன்
கார்மேகத்தில் உன் கண்கள் பார்தேன்
இறுதியில்...,
என்னில் உன்னை பார்த்தேன்...

என் காதலை காற்றும் சுவாசிக்கும்...



உண்மை காதல் காலங்கள் கடந்தாலும்
கல்மீது எழுதிய எழுத்த
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்
என் உயிர் பிரிந்தாலும்
என் காதலை 
இந்த காற்றும் சுவாசித்துகொண்டிருக்கும்...

Wednesday, September 12, 2012

எனக்கு விருது வழங்கிய ஹிஷாலீக்கு நன்றிகள்...




எனக்கு விருது (Sunshine blogger award) வழங்கி பெருமைப்படுத்திய ஹிஷாலீ அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...


எனக்கு விருது வழங்கிய ஹிஷாலீ இணையதளம்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்கள்...

1. கவியருவி ம. ரமேஷ்
2. தளிர் அண்ணா சா. சுரேஷ்பாபு
3. யாழ்பாவாணன்
4. கலைநிலா
5. பகீ
6. அருண்
7. அரசன்

பிடிக்கவில்லை...



கடவுளுக்கு தான் என்னை
பிடிக்கவில்லையென தினமும்
கண்ணீர் துளிகளை தருகிறார்

அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்றுவரை என்னை தேடி வரவில்லை...

வலிக்கிறது...




நான் அழுத போது
எனக்கு ஆறுதல் சொல்ல நீ
என்னருகிலில்லை

இப்போது நீ அழுகிறாய் தோழியே
உன் கண்ணீரை துடைப்பதற்கு கூட
நான் உன்னருகிலில்லை

சோகம் என்பது நமக்கு
என்றுமே நிரந்தரமில்லை
என்பதை இன்றாவது புரிந்து விடு

நிரந்தரமில்லாத ஒன்றிற்காக
தயவு செய்து கண்ணீர் சிந்தாதே
என் இதயத்திற்கு வலிக்கிறது...

காதல் வலி...



உன் பதில் தெரியாமல்
கொஞ்ச நாள் தவித்தேன்
உன்னை பார்க்கவே
பல நாள் துடித்தேன்
நீ அருகில் இருக்க வேணும் என்று
தினமும் ஆசைப்பட்டேன்

நீ என்னை பிரிந்ததும்
பல ஜென்மம் வேணும்
நான் உன்னை மறப்பதற்கு என
உணர்ந்தேன்...

இதயம்...



என்னிடம் தான் சொல்லவில்லை
நான் இறந்த பின்
என் கல்லறையிலாவது
ஒரு முறை எழுதுவாய
இதில் உறங்குவது
என் இதயம் என்று...
PAKEE Creation