Saturday, May 5, 2012

நட்பின் பிரிவு...


பள்ளி என்னும் மூன்றெழுத்தில் - கூடி
கல்வி என்னும் மூன்றெழுத்தில் - சேர்ந்து
அன்பு என்னும் மூன்றெழுத்தில் - இணைந்து
பிரிவு என்னும் மூன்றெழுத்தில் - தவிக்கின்றோம்...

சந்திக்கலாமா?...



சந்தித்த வேளை சிந்திக்க வில்லை
காரணம் சந்தித்த இடத்தில் என்
மனதை தொலைத்து விட்டேன்
சந்தித்த இடத்தில் மீண்டும் சந்திக்கலாமா?...

காத்திரு...


எப்போது முதல் முதல் பார்த்தமோ
அப்போதே நீ என் இதயத்தை திருடி விட்டாய்
எப்போது உன் இதயத்தை திருட வருவேன்
என காத்திரு...

பெண்...


பெண் அன்பில் ஒருதாய்
பெண் அழகில் ஒரு தேவதை
பெண் அறிவில் ஒரு மந்திரி
பெண் அதரவு தருகையில் ஒரு உறவு
பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு
பெண் வெற்றிக்கு ஒரு மாலை
பெண் தோல்விக்கு ஒரு பள்ளம்
பெண் நட்பில் ஒரு நேர்மை
பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார்
இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...

அன்பு...





எண்ணெயில் எரியும் சுடர்
விளக்கை அணைக்க முடியும் - ஆனால்
அன்பில் எரியும்
சுடர் விளக்கை எவாராலும்
அணைக்க முடியாது...

Thursday, April 26, 2012

காதலாய் நீ கிடைத்தாய்...



கற்பனைகள் இல்லாமல்
கவிதை இல்லை
காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
ஆனால் என் வாழ்வில்
கவிதையிலும் கற்பனையிலும்
காதலாய் நீ கிடைத்தாய்...

நட்சத்திரமாய் மிளிர்வேன்...




உன் வீட்டு முற்றத்தில் நின்று
நட்சத்திரங்களை எண்ணிப்பார்
அதில் ஒன்றாய் நான் மிளிர்வேன்...

நீ அழகுடி...



ரோஜாச் செடியில்
ஏராளமான முற்கள் உண்டு
ஆனால் ரோஜாப்பூ
அழகாத்தான் இருக்கும்
அது போல நீ சில சமயம்
கோவபட்டாலும் நீ அழகுடி...

இதயமே பெரிது...


இடியின் ஒலியைவிட
கடலின் அலையை விட
பூவின் மனதை விட
காதலின் இதயமே பெரிது...

Monday, April 9, 2012

காதல்...




காதல் கொள்வதில் நிதானமாய்
இரு
காதல் கொண்டபின் நிலையாய்
இரு
PAKEE Creation