Thursday, July 21, 2011

அம்மா...


அம்மா...

பிறந்தவுடன் சொன்னதும்..

உயிரை

வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,

அம்மா....

அம்மா.....

'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன்

அன்பின் கதகதப்பும்,

வலிக்காத தண்டனைகளும்..,

இனி

யாராலும் தர முடியாது...

கட்டெறும்பு கடித்த போதும் .,

காதல் போன போதும்..,

"அம்மா"

என்று சொல்லி

ஆறுதல் அடைந்தேன்..??

நீ

இங்கே இல்லாமல் போனதாய்

ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும்

என் காலைநேர

கனவில் வந்து அழகாக்குகிறாய்

என் நாட்களை...

அம்மா...

அன்பிற்கு உயிர் கொடுத்தவளே பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க...


எத்தனை கடவுளிடம்

எனக்காக வேண்டியிருப்பாய்!

எத்தனை மணித்துளிகள்

எனக்காக காத்திருந்தாய்!

எத்தனை இரவுகள்

என் வரவுக்காக விழித்திருந்தாய்!

எத்தனை ஆண்டுகள்

இரவில் விழிக்காமல் நானிருக்க

விழித்து கொண்டு நீ இருந்தாய்!

*

கருவறையில் இருக்கும்

கல்லைவிட,கள்ளகபடமில்லாத,

கருவறையில் சுமந்தவளே,

கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்!

*

என் வலிக்காக நான் அழுதேன்.

வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை...

காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்!

*

இதயத்தை உதைத்தவளுக்காக

வலியால் நான் அழுதேன்...

காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும்

என்னுடன் நீ அழுதாய்!

*

அன்பு ஒன்றே உலகில்

சிறந்தது என்பதை தெரியவைத்தாய்!

அன்புதான் அழுகையாக

வெளிப்படுகின்றது என்பதை புரியவைத்தாய்!

அன்பே அன்னை!அன்புதான் உலகம்

என்பதை உணர்த்தினாய்!

*

கருவறையில் இருந்தபோது

கரு என்று பாராமல்,

உன் உயிரை பற்றி நினைக்காமல்

கருவிற்கு ஓர் உயிர் கொடுத்தாய்!

*

மழலையாக தவழ்ந்தபோது

இரத்தம் என பாராமல்,

என் கண்ணீரை துடைக்க

இரத்தத்தை பாலாக மாற்றி,

எனை மகிழச்செயதாய்!

*

மனிதனாக வளர்ந்தபோது

சோகம் தெரியாமல் நான் வாழ,

சுகமாக நான் இருக்க,

நலமுடன் நான் வாழ,

எனக்காக என்று நான் இருந்தபோது

தனக்காக என்று நீ இல்லாமல்,

இரத்தத்தை உருக்கி

வியர்வை சிந்தினாய்!

*

அன்றும் எனக்காக

கண்ணீர் வடித்தாய்!

இன்றும் எனக்காக

கண்ணீர் வடிக்கின்றாய்!

*

இதுவரை செய்த தவறுகளுக்காக

தலை வணங்குகின்றேன்!

வாழ்க்கையை தொலைக்க

நான் விரும்பவில்லை...

இதோ!கடவுளாக

உனை வணங்குகின்றேன்!

*

கடல் தாண்டி

பயணம் செய்ய விருப்பமில்லை.

நீயே!எந்தன்

அசையா சொத்தாக இருக்கும்போது!

காற்றை

சுவாசிக்க விருப்பமில்லை...

நீயே!எந்தன்

மூச்சாக இருக்கும்போது!

ஒலியினை கூட

கேட்க விருப்பமில்லை....

நீயே!எந்தன்

செவியாக இருக்கும்போது!

*

அத்தனையும்,

இத்தனையும்,

இத்தனை நாட்கள்

நான் இழந்ததுபோதும்...

இனி,அன்பை மட்டும் என்றும்

நான் இழக்க விரும்பவில்லை...

*

தாயே!உனையே!

என் இதயத்தில் நேசிக்கிறேன்!

உன்னை மட்டுமே

உயிரின் மூச்சாக சுவாசிக்கிறேன்!

*

இனி,எனக்கு

ஒரு பிறப்பு என்றால்,

அது உன் கருவறையாக

மட்டும்தான் இருக்க வேண்டும்.

எனக்கு இறப்பு என்றால்,

அதுவும் உன் மடியாக

மட்டுதான் இருக்க வேண்டும்....

*

இனி,உனக்கு

ஒரு பிறப்பு என்றால்,

எனக்கு மகனா

மட்டும்தான் நீ பிறக்க வேண்டும்...

மகனாக பிறந்து,

தாயாக இருந்து,

எனை நீ

வளர்க்க வேண்டும்.....

*

கடவுள்

என்பவன்

ஒருவன் இருந்தால்,

இதனையேற்று

எனக்காக

செவி சாய்க்க வேண்டும்....

*

அன்பே கடவுள்!

அன்பை தரும்

அன்னை மட்டுமே கடவுள்!

தாயே!நீ வாழ்க!

அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!

பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க...

சின்ன சின்ன ஆசைகள்..




நான்...

வானில் பறந்து

மேகமாய் ஓட

வேண்டும்!

நான்...

நிலவில் விழுந்து

வின்மினாய் விழ

வேண்டும்!

நான்...

தென்றலில் புகுந்து

புயலாய் மாற

வேண்டும்!

நான்...

மலரில் நுழைந்து

தேனாய் சிந்த

வேண்டும்!

நான்...

கடலில் அலைந்து

கரையாய் ஒதுங்க

வேண்டும்!

நான்...

பகலில் பட்டாம்

பூச்சியாய் பறக்க

வேண்டும்!

நான்...

இரவில் மின்மினி

பூச்சியாய் திரிய

வேண்டும்!

நான்...

தாமரை இலையில்

பனித்துளியாய் தூங்க

வேண்டும்!

நான்...

மரத்து கிளையில்

இலையாய் தொங்க

வேண்டும்!

என்றும் நான்

இயற்கை உடன்

வாழ வேண்டும்...

Sunday, March 27, 2011

துடிக்கத்தானடி தெரியும் என் இதயத்திற்கு...



துடிக்கத்தானடி
தெரியும்
என் இதயத்திற்கு
பேச மட்டும் தெரிந்தால்
சொல்லிவிடும்
உன்னை
சுமப்பதனால்
எவ்வளவு வலி என்று...

நினைவுகள் கூட அன்பாக பேசும்...



உண்மையான
உணர்வுகள்
இருந்தால்
வார்த்தைகள்
தேவை இல்லை
நினைவுகள்
கூட அன்பாக பேசும்...

எப்போது வாழும் உண்மையான காதலர்களின் நினைவுகள் என்னும் காதல்...



என் வாழ்கை
ஒரு வானவில்லை
போல், தோன்றி உடனே மறைந்து விட்டது,
அவளை காதலித்ததால்,

என் உயிர்
ஒரு நாள் வாழும்,"ஈசல்"ஐ
போல், சிறு காலங்களில்
பிரிந்து விட்டது,
அவள் மேல் அன்பு கொண்டதால்,

என் ஆன்மா இறந்தும்,
அலைந்து கொண்டு தான் இருக்கிறது,
அவள் நினைவால்,

உயிர் உள்ள வரை மட்டும் அல்ல,
உலகம் அழியும் வரை மட்டும் அல்ல,
எப்போது வாழும் உண்மையான காதலர்களின் நினைவுகள் என்னும் காதல்...

அவளுடன் வாழ்ந்த கனவுகளை...



காதல் செய்தேன் அவளை அல்ல,
அவளுடைய நினைவுகளை,
அதனால் தான் அவள்
என்னை
வெறுத்த பின்னும் காதலிக்கிறேன்,
அவளையும் அல்ல,
அவள் நினைவுகளையும் அல்ல,
அவளுடன் வாழ்ந்த கனவுகளை...

உண்மையான காதலுக்கு கண்கள் இருக்கிறது என்கிறார்கள்.!.



உண்மையான காதலுக்கு கண்கள்
இருக்கிறது என்கிறார்கள்.!

But,
என் காதலுக்கோ
இல்லாமல் போனது ஏனோ..!? ..
(தவறு என் மேலா..)
புரியவில்லை என் இமைகளுக்கு..
ஏனென்றால் இன்னும்
உன் அன்பு காதலை நினைத்து
அழுகின்றதே...

உன்னை நினைத்து...



என்னோடு நீ பேசாத நேரங்களில்,
என் இதயம் பாடும் வேதனைதான்.
என் இமை ஓரம் கண்ணீர் துளி...

உன்னை நினைத்து...

போன ஜென்மத்தில்...



போன ஜென்மத்தில்
மெழுகுவர்த்தியாக பிறந்தனோ தெரியவில்லை
இந்த ஜென்மத்தில் உருகிறேன்
உன் நினைவுகளால்...
PAKEE Creation