Sunday, March 27, 2011

அவள் இதயம் துடிக்கும்...



அவள் இதயம் துடிக்கும்
வ்வொறு நொடியும்
நான் ரசித்து கொண்டிருப்பேன்,
ஏனென்றால்
துடிப்பது அவள் இதயம்
என்றாலும்
இருப்பது என்னிடம்...

ஆனால் நீ என்றும் என் மனதில்..



உன்னில் நான்
எண்ணில் நீ
சில நேரம் நினைவில்
சில நேரம் அருகில்
சில நேரம் தொலைவில்

ஆனால் நீ என்றும் என் மனதில்...!

தண்ணீரில் அல்ல, கண்ணீரில்...




ஒவ்வொரு நாளும் நான்
குளிக்க தவறிணனோ
என்னவோ தெரியவில்லை எனக்கு.

But,

தினமும் தவறாமல்
குளித்தது என் தலையணை.

தண்ணீரில் அல்ல,
கண்ணீரில்...

என் உயிர் நீயாக இருப்பின்...


என் உயிர் நீயாக இருப்பின்
என் இதயம் துடிக்கும்
நான் இறந்தும் உனக்காக...

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்...



உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்.

கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டுமல்ல

என்னோடு இருக்கும் கவலைகளும் மறைந்து விடும்...

அன்பு காதல் மலராக, உனக்காக...



நீ விட்டு சென்ற போது கூட
என் கண்ணில் வரவில்லை கண்ணீர் துளி..

காரணம்,
நீ என்றாவது திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில்.

ஆனால்,
நான் எதிர் பார்த்தது போல நீ திரும்பி வந்தாய்.
என் காதலை ஏற்றுக்கொள்ள அல்ல,
உன் வாழ்த்துமடல் கொண்டு.

அப்போதுதான் உனக்கென சேமித்து வைத்த கண்ணீர் துளி
மொத்தமாக வெளி வந்தது
உன்னை சபிக்க அல்ல,
உன்னை வாழ்த்த வந்தது...

உன்னை விட உன் நினைவுகள் மேல் அன்பு அதிகம்...



உன்னை விட
உன் நினைவுகள்
மேல் அன்பு அதிகம்...

ஏன் என்றாள்

அவை என்றும்
என்னை விட்டு
பிரிய நினைப்பதில்லை...

என்னவளில் எச்சில் துளிகள்தான் வானிலே மின்னுகிற நட்சத்திரங்கள்...



என்னவளில்
எச்சில் துளிகள்தான்
வானிலே மின்னுகிற
நட்சத்திரங்கள்

அவள் வெட்டியெறிந்த
அவளின்,
கட்டை விரல் நகம்தான்
வானிலே வட்ட நிலவாய்
வளர்ந்து நிற்கிறது...

இரவுகள் விடிய அதிக நேரங்கள் ஆகட்டும்....



இரவுகள் விடிய
அதிக நேரங்கள்
ஆகட்டும்....
கனவிலாவது
நீ என்னோடு
இருக்கும் நேரங்கள்
அதிகமாகும்
என்பதால்...

அது ஒரு உடைந்த இதயத்தின் அழுகை...



‎"கவிதைகளை எல்லோரும்
அமைதியாக தான் வாசிப்போம்...
ஏனென்றால், அது ஒரு உடைந்த
இதயத்தின் "அழுகை''...
PAKEE Creation