Tuesday, October 20, 2009

தாய்மை நட்பில் இருக்கிறது....


தாய் பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில்
இருக்கிறது.

நட்பு...


எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தெர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தெர்ந்தெடுத்தேன்
அதனால் தான்
நட்பு
நம்மைத்
தெர்ந்தெடுத்திக்கிறது.

இதயத்தின் சுகம் தெரியும்...


நீ
நேசிக்கும்
இதயத்தில்
பல
ஆண்டுகள்
வாழ்வதை விட
உன்னை
நேசிக்கும்
இதயத்தில்
சில
நெடிகள்
வாழ்ந்து
பார்
இதயத்தின்
சுகம்
தெரியும்.

கவிதை...


கவிதை
வேண்டுமென
போனா
தூக்கினேன்...!!
கைகள்
தானாய்
கிறுக்குதடி
உன்
பெயரை.

வாசம் வீசும் பூவாக இருப்பேன்...


நீ
ரசிக்கின்ற
றோஜா பூ
சில நாட்களே
வாசம்
வீசும்
நானே
என்
இதய
தோட்டத்தில்
நீ
சுவாசிக்கும்
வரை
வாசம் வீசும் பூவாக இருப்பேன்.

Wednesday, October 14, 2009

விழியின்றி என்னாலும் பார்வையில்லை...


விழியின்றி
என்னாலும்
பார்வையில்லை
நீ
இன்றி
என்னாலும்
நானில்லை.

உயிர் பிரிகின்றபோதும் உன்னையே சுவாசிப்பேன்...


இன்னொரு பிறவி
வரை உன்னையே
நேசிப்பேன் என்
உயிர்
பிரிகின்றபோதும்
உன்னையே
சுவாசிப்பேன்.

காதலின் தோல்வி...


காதலின்
தோல்வி
வாழ்வின்
கடைசி
மூச்சு வரை
தொடரும் வலி
தீயில் வேகின்ற
போதும் தீராத
வலி.

கண்ணில் நீ வந்த வேளை...


கண்ணில் நீ வந்த வேளை
கனவுகள் பல தந்தாய்
என் காதலை உன்னிடம்
சொன்ன வேளை
என் கண்களை பிடிங்கி
சென்றாய்.

காதலின் தோல்வி கண்டால்...



காதலின் தோல்வி
கண்டால் அந்த
சுட்டெரிக்கும் சூரியன் கூட
தன் நிலையை மறந்து
கண்ணீர் சிந்தும்
இதுவே காதலின் வலி.
PAKEE Creation