Monday, October 5, 2009

என்னுள் துடிக்கும் இதயம் அது நீயே...


என்
சொந்தங்களை
இழப்பேன்
என்னையே
அழிப்பேன்
ஆனால்
உன்னை
மட்டும்
இழக்க மட்டேன்
என்னுள்
துடிக்கும்
இதயம் அது
நீயே.

வேதனையை உணர்ந்தால்...


கருவறையில்
இருக்கும்

குழந்தை
கூட

கண்ணீர்
விடும்
இந்த

காதலின்
தோல்வியின்

வேதனையை

உணர்ந்தால்.

வாழ்த்திடுவேன் உ ன் நினைவோடு...


இருள் சூரியன் மறையும்
வரை காத்திருக்கும்

இரவு வர

என் உயிர் மறையும்
வரை

வாழ்த்திடுவேன்

உ ன் நினைவோடு.

Tuesday, September 29, 2009

உன்னைச் சுமக்கிறேனே நான்....


தன்
உடம்பின் பாரத்தை
விடக் கூடிய பாரத்தைச்

சுமக்குமாம்
எறும்பு.
கையளவஇதயத்துள்
உன்னைச் சுமக்கிறேனே நான்.

உன்னை ஞாபகப்படுத்த...


உன்னை

ஞாபகப்படுத்த உன் புகைப்படம் வேண்டாம்

உன் புன்னகையும் வேண்டாம்

உன் கவிதையும் வேண்டாம்

ஏன் உன் நினைவும் வேண்டாம்

உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே

இருக்க எதுவாலும் முடியாது

உன்னைத்தவிர எனக்கு........

என்னிடத்தில் தான் நிரந்தரமாய்.......


என்
நினைவுகளை
விட்டு நீ
வெகுதூரம்
சென்றி௫க்கலாம்
ஆனால்
உன்னினைவுகள்
என்னிடத்தில்
தான்
நிரந்தரமாய்.......

எத்தனை பிறவி வேண்டுமடி...




உன்
இமைகள்
பாடும் தாலாட்டில்
என்
இதயம் விழிக்கும்
சுகமாக!

உன்
விழிகள்
வீசும் பூங்காற்றில்
என்
உள்ளம் இசைக்கும்
பூபாளம்!

உதட்டில்
உயிரை வைத்தாயோ
என்
உள்ளம் முழுதும்
மின்னல்
அடிக்குதடி!

எத்தனை அழகு
உன்
கூந்தல்
என்னை மறந்தேன்
கண்
சிமிட்டவில்லை!

நிலவை பிழிந்து
வடித்தாரோ?
இல்லை
தங்கத்தை செதுக்கி
செய்தாரோ?

சேலைப்போர்த்திய
உன் அழகு
சிந்தும் கவர்ச்சி
சிலிர்க்குதடி!

உன்
பாதம் கொஞ்சும்
மொழியழகோ
உன்
கொலுசுகள்
பாடும் இரரகங்கள்!

வார்த்தைகள்
இன்னும்
உதிர்க்கவில்லை
ஏன்
பாற்கடல் அமுதம்
ஏதுமுண்டோ?

எதை
எதையெல்லாம்
அழகென்றேன்
இன்று வெட்கித்
தலைக் குனிந்தேன்!

இத்தனை அழகை
ரசிப்பதற்கு
எனக்கு
எத்தனை பிறவி
வேண்டுமடி?

Sunday, September 27, 2009

எப்படிச் சொல்வது...


பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

நம்பிக்கையின் அலட்சியமே...


நீ
விலகமாட்டாய் எனும்
என்
நம்பிக்கையின் அலட்சியமே
நீ
விலகிவிடக் காரணம்

ஒரே ஒரு சந்தேகம்...


இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை
மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார்
ஒளி தந்தது ?
PAKEE Creation