Sunday, September 27, 2009

உன் கண்ணுக்குள் தான் காதலில்லை...


காதலுக்கு
கண்ணில்லை
என்பதெல்லாம்
பொய்
உன்
கண்ணுக்குள்
தான்
காதலில்லை.

நீ இருந்தால்...


எது
இல்லாமலும்
என்னால்
இருக்க
இயலும்,
நீ
இருந்தால்.

உன்னை...


உன்னை
அதிகமாய்
நேசிக்க
நேரம்
தேடுவதனாலேயே
என்னை
நேசிப்பதை
நிறுத்தி விட்டேன்.

நான் உன்னை நேசிக்கிறேன்...


உன்னைப் பற்றி
எத்தனை கவிதை எழுதினாலும்
அவை
அழகாய் தோன்றுவதில்லை எனக்கு.
என் நண்பர்களோ
அக் கவிதைகளை
பலமாய்
பாராட்டுகிறார்கள்.

அவர்கள் என்னை
நேசிக்கிறார்கள்.
நான் உன்னை நேசிக்கிறேன்.

உன்னை மட்டுமே பிடிக்கிறது...


மழையில்
நனைந்தால்
ஜலதோஷம்
பிடிக்குமாம்
எனக்கென்னவோ
மழையில்
நனைந்தாலும்
உன்னை
மட்டுமே பிடிக்கிறது
.

உணர்கிறேன்...


ஒவ்வொரு
கவிதை
முடிவிலும்,
உன்னை
இன்னும்
அதிகமாய்
நேசிப்பதாய்
உணர்கிறேன்.
அதற்காகவே
இடை விடாமல்
எழுதத் துடிக்கிறேன்.

காதல் தோல்விகள்...


இனியவளே!
காலை
கதிரவன்
கண் விழிக்கும்
முன்னே
காளையவன்
கண் விழிக்க...
சொந்தம்
கொண்ட
தென்றல்
இல்லாத
சோக சோலையிலும்
அவன்
மோகத்தில் இருக்க...
எதுகையும்
எதார்த்தமாக
மோனையும்
மொத்தத்தில்
அவன்
கவிதைகளில் இருக்க...
ஆனால்
கட்டும்
புடவையாக
காதலை
(ஏ)மாற்றும்
காதலிகள் இருக்க...
உலகம்
நிற்கும் வரை
காதல்
தோல்விகள் இருக்கும்!

குமுறி வெடிக்கும் இதயம்...



குமுறி வெடிக்கும் இதயம்

சாவை நோக்கிஅழைக்கிறது

நெருப்பு நீரில் குளித்தெழும்ப

மனம் என்னை இழுக்கிறது

நினைத்துக்கூடப் பார்க்கவில்லை

நிம்மதி தந்தவள்

நிறுத்திவிடுவால் என்று

காற்று நின்று இதயம் அடித்து

கண்கள் மூடும்வேளை

கானல் நீராய்ப்போன வாழ்க்கை

குறுகிப்போய்விடும் என் உடல் கருகிப்போய்விடும்

உடல் எரியும் சாம்பல் மேட்டில்

ஊளை இட்டு நாய் வாலை ஆட்டும்

காதல் நிலைத்தது எனக்காட்ட

காலால் கிளறும் என் இதயத்தை

ஆப்பொழுது தெரியும்

நாய்க்குத்தெரிந்தது

எனக்குத்தெரியவில்லையே என்று

காதல் வலி...


என் வாழ்வின் சந்தோசம்
என் காதல் என்றிருந்தேன்
உன் அழகை ரசித்தேன் - அதைவிட
உன் உள்மனதை புரிந்து கொண்டேன்

நீயோ! என்னை ஸ்பரிசத்துக்காக
ஏங்குபவன் என்றாய்
உன் வார்த்தை வலியை விட
என்னை காதல் வலி கொல்கிறது

ஞாபகங்கள் துரத்துகின்றன
தவிர்க்க முடியவில்லை
இன்றும் கானல் நீராய்,
என்னுள் என்னை ஏமாற்றுகின்றாய்

நித்திரை இன்றி, கனவுகள்
தொலைந்த இடம் தெரியவில்லை
உணவு இன்றி, பசி
தொலைந்த இடமும் தெரியவில்லை

மாரி மழை பொழிந்தாலும் - என்னை
சோக மழை நனைக்கிறது – ஆனால்
உன் எண்ணங்களை கரைக்காது
காப்பதற்கு என் நெஞ்சில் திடம் இருக்கிறது…

காதல் வலி...


காதல் என்ற ரோஜா
உன் கைகளை மட்டுமல்ல
இதயத்தையும் குத்திவிட்டதை
இதயம் திறந்து சொல்லாமலே
இனம் கண்டு கொண்டேன் நான்

அமைதியாக இருக்கும் உனக்குள்
ஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை
பார்த்த மருகணமே உணர்ந்துக்கொண்டேன்
குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!

இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!
PAKEE Creation