Friday, July 17, 2009

நான் உன்னை


நான் உன்னை போ போ
என்று சொல்லுவது
நீ என்னைவிட்டு போகவேண்டும்
என்பதற்க்காக அல்ல
என் இதயத்தினுள் போ போ
என்பதற்க்காக

என்னை மறக்க சொல்லுவது
ஒரே அடியாக மறந்துவிடுவதற்கு
அல்ல மறுபடியும் என்னை
நினைக்க செய்வதற்காக

உன்னை நேசிக்க
நான் யோசிப்பது இல்லை
நான் யோசிப்பதே
எவ்வாறு எல்லாம் உன்னை
நேசிக்கலாம் என்பதற்காகத்தான்

உன்னை பார்க்காமலிருப்பது
தவிர்க்க வேண்டும் என்பதற்கல்ல
எப்போதும் உன் நினைவாலே
தவித்துகிடக்க வேண்டும் என்பதற்குத்தான்

கடைசியாக ஒன்று
என்னை காதலிக்கவேண்டம்
எண சொல்லுவது எதற்குதெரியுமா
உனக்கும் சேர்த்து நானே
காதலித்து கொள்கிறேன் என்பதற்க்காகதான்...

சத்தமின்றி தான் அழுகிறேன்.


சத்தமின்றி தான் அழுகிறேன்.
நான் ஆனாலும்
எப்படியோ தெரிந்த்து விடுகிறது
என் விரலுக்கு..
கண்ணுக்கும் விரலுக்கும்.
என்ன அப்படி ஒரு அன்பு....

நினைவலைகளை அள்ளி


என் உள்ளக்கிடங்கில்
சேர்த்து வைத்த உன்
நினைவலைகளை அள்ளி
வீசுகிறேன்
அது கடலையும் மிஞ்சி
பொங்கி எழும் பேரலைகலாகி
உன்னை அள்ளி செல்லும்

என் எண்ண அலைகளில்
நீந்திப்பார்
என் மனம் எனும் ஆழ்கடல் எங்கும்
உன் நினைவுகள் பதிந்த
முத்துக்கள் ஒளிந்திருக்கும்
உன் நினைவாலே உருவாகிய
காதல் கடலை
வற்றாமல் நிலை காப்பாய் என் ஜீவனே....

உன் கடிதத்தை


உன் கடிதத்தை
எங்கு வைக்க?
எங்கு வைத்தாலும் ...
இனிப்பென்று நினைத்து
எறும்புகள் கடித்திடுமோ?
என்று
சட்டைப்பையில் வைக்கிறேன்
இதோ கடிக்கிறது இதயத்தை
உன் நினைவுகளின் எறும்புகள்..

உன் கடிதத்தை
படிப்பதில் உள்ள ஆர்வத்தைவிடவும்
பார்த்துக் கொண்டிருப்பதில்தானடி
சுகம் இருக்கிறது.*கனவில்*
ஆகவே
வெற்றுத்தாளாயினும் பரவாயில்லை..
கடிதம் அனுப்பிக்கொண்டேயிரு
நான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

உனக்கு
கடிதம் எழுதும்பொழுது மட்டும்
கைகள்
அட்சயப்பாத்திரமாகிவிடுகிறதடி!

பாரேன்
எழுத எழுத..
வந்துகொண்டே இருக்கிறது
வார்த்தைகள்!
உன் நினைவுகளாக ......

அன்னை



ஈடு கொடுக்க முடியாத சொந்தம் ------- தாய்
முன்னேற்றத்தின் வழிக்காட்டி -------- தந்தை
மீள முடியாத பந்தம் -------- பாசம்
என்றும் நிலைக்காதது ------- கற்பனை
விடிந்தால் முடிந்து போகக் கூடிய வாழ்க்கை -------- கனவு
வெற்றி பெற முதல் வைப்பது ------------- நம்பிக்கை
வாழ்க்கையில் இருக்கக் கூடாதது --------------- எதிபார்ப்பு
புரிந்து கொண்டவர்களுக்கே -------------- வாழ்க்கை
கண்ணீருடன் முடிவடைவது --------------------- கஷ்டங்கள்
அழியாத சொந்தம் ---------------------------நட்பு
உலகத்தில் அனைவருக்கும் கிடைக்காதது ---------நிம்மதி
ஆசைப்படுதலின் முடிவு --------------------- அறிவு
வறுமையை விட கொடிய நோய் ---------------பிரிவு

ஒற்றை பூ


முதல் முறை
நான்
உன்னை பார்க்க வந்தேன் !

ஒற்றை பூவை
கூட உன்னால்
கொண்டு வரமுடியாத
என கோபித்தாய்
நீ ?

வெகு இயல்பாய்
சொன்னேன் உன்
விழி பார்த்து

"பூந்தோட்டத்துக்கு
வரும் போது யாரும்
பூக்களோடு வருவதில்"

உயிர் இல்லாத என் இதயத்தில்


உயிர்
இல்லாத என் இதயத்தில்
உன் நினேவுகள்
மட்டும் என்றும் உயிரோடு...

நினைத்துப்பார்க்கிறேன்


வேண்டாம் என்று சொல்லி
எனை விலகி நின்ற
நொடிகளை
நினைத்துப்பார்க்கிறேன்

இல்லை என்று சொல்லி
இதயத்தின் இயக்கம்
நிறுத்திய கணங்களை
நினைத்துப்பார்க்கிறேன்

வலிக்கவே இல்லையே
இன்னுமா - நீ
என் மீது கொண்ட
அந்த ஏதோ ஒன்று

உயிரோடு இருக்கிறது...

வரம்,தவம்


உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவுகளோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம் தான் உண்டு
உன்னோடு வாழ்ந்தால் அது வரம்
உன் நினைவுகளோடு வாழ்ந்தால் அது தவம்...

நம்பிக்கை...


என் உள்ளத்தின் ஆழத்தில்
உறங்கிக் கிடக்கின்றன
பல கனவுகள்.

உயிரின் அடி ஆழத்தில்
ஏக்கம் என்னும் நதி
பெருக்கெடுத்தோடுகின்றது.

எதையோ தொலைத்து
எதையோ தேடியபடி
வீதிகளின் ஓரங்களில்
விரைவுப் பயணங்கள்

விதியின் விளையாட்டால்
வீணாகும் என் வாழ்நாட்களை
எவரால் மீட்க முடியும்?

வாழும் நாட்கள்
தருகின்ற வலியை
யாரால் தாங்கமுடியும்?

எப்பொழுதும்
வானத்தை நோக்கியபடியே
வாசம் செய்கின்றேன்

என் சிறகுகள்
உடைந்து போனாலும்
நினைவுகள் ஏனோ
உயரவே பறக்கின்றன.

விழிகளைத் திறந்தபடிதான்
தூங்குகின்றேன்
விழி மூடும் பொழுதெல்லாம்
விழித்திருக்கின்றேன்

எனக்கும் சிறகுகள் முளைக்கும்
என்ற நம்பிக்கையில்
புதைந்து கிடந்தாலும்
புதையலாகவே கிடக்கின்றேன்...
PAKEE Creation